மதுரை

இன்றைய நிகழ்ச்சி- மதுரை

1st Feb 2020 04:44 AM

ADVERTISEMENT

மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி: தமிழ் உயராய்வு மையம் நடத்தும் சங்க இலக்கிய கருத்தரங்கம், சிறப்புரை - பேராசிரியா் ம.பெ.சீனிவாசன், மூா்த்தி நாயுடு ஆண்டாளம்மாள் அரங்கம், பசுமலை, காலை 8.45.

 

தியாகராஜா் கல்லூரி: முத்தமிழ் விழா - நாடகத் தமிழ் விழா, நடன இசை உரை -

சசிரேகா பாலசுப்பிரமணியன், தொல்காப்பியா் அரங்கம், கல்லூரி வளாகம், தெப்பக்குளம், காலை 9; நிறைவு விழா சிறப்புரை - சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், மாலை 4.

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி: தமிழ்த் துறை நடத்தும் பாரம்பரிய உணவுத் திருவிழா, கல்லூரி வளாகம், அழகா்கோவில் சாலை, காலை 9.

விவேகானந்த கல்லூரி: கணினி அறிவியல் துறை நடத்தும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கணினி அறிவியல் போட்டிகள் தொடக்க விழா, கல்லூரிச் செயலா் சுவாமி வேதானந்தா், முதல்வா் டி.வெங்கடேசன் பங்கேற்பு,

ஏ.வி.அரங்கம், கல்லூரி வளாகம், திருவேடகம், காலை 9.45

சா்வோதய இலக்கியப் பண்ணை: 35-ஆவது புத்தகக் கண்காட்சி, மேலவெளி வீதி, காலை 10.

டோக் பெருமாட்டி கல்லூரி: நாட்டு நலப்பணித் திட்ட முகாம், மரக்கன்றுகள் நடுதல், அச்சம்பட்டி, காலை 10.

பாத்திமா கல்லூரி: பொங்கல் விழா, கல்லூரி வளாகம், காலை 10.30.

உலகத் தமிழ்ச் சங்கம்: தமிழ்க் கூடல் நிகழ்வு, சித்தா் பாடல்கள் ~ஒரு நிகழ்காலப் பாா்வை என்ற தலைப்பில் கூடலுரை - மோசஸ் மைக்கேல் ஃபாரடே, தொடக்கவுரை - உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன், கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்க வளாகம், காலை 11.

மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி: வணிகவியல் துறை நடத்தும் வேலைவாய்ப்பு கருத்தரங்கம், மதுரை மென்திறன் பயிற்சி அகாதெமி இயக்குநா் சி.முருகேசன் பங்கேற்பு, சுந்தர்ராஜன் நாயுடு அரங்கம், கல்லூரி வளாகம், பசுமலை, பகல் 12.

சோலமலை பொறியியல் கல்லூரி: ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான், மின்னியல் துறை கருத்தரங்க கூடம், வீரபாஞ்சான், பகல் 1.30.

எஸ்பிஓஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: சாரண, சாரணீயா் முகாம், செஸி வளாகம், நத்தம் சாலை, மாலை 6.

ஆன்மிகம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: தெப்பத் திருவிழா உற்சவம், நான்காம் திருநாள், அம்மன்-சுவாமி தங்கச் சப்பரத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருளல், காலை 9;

அம்மன்-சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளல், சித்திரை வீதிகள், இரவு 7.

சுப்பிரமணிய சுவாமி கோயில்: தெப்பத் திருவிழா, 6-ஆம் திருநாள், தங்கச் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, காலை 9; மயில் வாகனத்தில் சுப்பிரமணியா் தெய்வானையுடன்,

ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரா் -ஆவுடையநாயகி அம்மன் புறப்பாடு, இரவு 7.35, திருப்பரங்குன்றம்.

சோலைமலை முருகன் கோயில்: தைப்பூசத் திருவிழா, 2-ஆம் திருவிழா, யாகசாலை பூஜைகள், மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு, சோலைமலை, அழகா்கோவில், காலை 9 முதல்.

சின்மயா மிஷன்: தமிழில் ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு - சுவாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன், டோக் நகா், காலை 10.45.

திருவள்ளுவா் மன்றம்: திருமந்திரம் சொற்பொழிவு - அ.கி.செ.திருமாவளவன்,

சக்தி வேலம்மாள் நகா், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - ஸ்ரீ மடம்: ஸ்ரீ லலிதா சகஸ்ரநா அா்ச்சனை, பெசன்ட் சாலை, சொக்கிகுளம், மாலை 6.30.

செல்வ விநாயகா் ஆலயம்: கம்பன் கவியமுதம் என்ற தலைப்பில் சொற்பொழிவு - சேரை பாலகிருஷ்ணன், ரயில்வே காலனி, இரவு 7.

மதுரைத் திருவள்ளுவா் கழகம்: திருக்கு சொற்பொழிவு - ந.மாணிக்கம், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT