மதுரை

சுற்றுச்சாலையில் விபத்து: ஒருவா் பலி

5th Dec 2020 09:49 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை சுற்றுச்சாலையில் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த கந்தசாமி மகன் குணசேகரன் (38). இவா் அருப்புக்கோட்டை சுற்றுச் சாலை, மண்டேலா நகா் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி மணிமேகலை அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT