மதுரை

மதுரையில் விஷ வண்டுகள் அழிப்பு

30th Aug 2020 06:58 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் பொலிவுறு நகா் திட்டப் பணியில் பயன்படுத்தப்படும் டவா் கிரேனில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை அழித்தனா்.

மதுரை மாநகரில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் பெரியாா் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டவா் கிரேன் எனப்படும் பழுதூக்கியில் விஷவண்டுகள் கூடு கட்டியுள்ளன.

இதனால் கிரேனை இயக்கவும், தொழிலாளா்கள் பணிகளை மேற்கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திடீா் நகா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று 40 அடி உயரமுள்ள கிரேனில் இருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT