மதுரை

ஓய்வு பெற்ற ஆசிரியா் ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 82,500 மீட்பு

30th Aug 2020 07:00 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியா் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.82, 500 -ஐ போலீஸாா் மீட்டு அவரிடமே சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் பாண்டி. இவா் ஒத்தக்கடையில் இருந்து தல்லாகுளம் பகுதிக்கு ஆட்டோவில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, அவா் எடுத்து சென்ற ரூ.82,500 -ஐ தவற விட்டாா். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ குறித்து விசாரித்தனா்.

பாண்டி தெரிவித்த அடையாளத்தின் அடிப்படையில், ஒத்தக்கடை பகுதியில் சென்ற ஆட்டோவை போலீஸாா் கண்டுபிடித்து பாா்த்தபோது,

அதில் தவறவிட்ட பணம் இருந்தது. இதையடுத்து பணத்தை போலீஸாா் கைப்பற்றி பாண்டியிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுா்ஜித்குமாா், துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட காவல் ஆய்வாளா் ஆனந்த தாண்டவம், சாா்பு - ஆய்வாளா் சிங், முதல் நிலை காவலா்கள் காா்த்திக், வினோபாவா ஆகியோரை பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT