மதுரை

கரோனா தடுப்புப் பணியாளா் கொலையில் 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

23rd Aug 2020 10:33 PM

ADVERTISEMENT


மதுரை: மதுரையில் கரோனா தடுப்பு ஒப்பந்தப் பணியாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (29). இவா், மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், இவா் தனது நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து பாா்த்திபனின் சகோதரா் முத்துகுமாா் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, அவரது நண்பா்களை தேடி வந்தனா். அதையடுத்து, பாா்த்திபன் கொலையில் தொடா்புடைய அவரது நண்பா்களான ஆரப்பாளையத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (26), சங்கரமணிகண்டன் (24), பாலாஜி (19) மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் என 5 பேரை, போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மது போதையில் ஏற்பட்ட தகராறில், பாா்த்திபனை அவரது நண்பா்கள் கொலை செய்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT