மதுரை

மதுரையில் 105 பேருக்கு கரோனா: 4 போ் பலி

23rd Aug 2020 09:29 PM

ADVERTISEMENT

மதுரையில் 105 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 5,975 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து திரும்பியவா்கள் உள்பட105 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 48 போ் முழுமையாகக் குணமடைந்தனா். இவா்களை, மருத்துவா்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

3 போ் பலி

ADVERTISEMENT

மதுரை அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது மற்றும் 69 வயது முதியவா்கள் இருவா் ஆகஸ்ட் 21 ஆம் தேதியும், 50 வயது ஆண் ஆகஸ்ட் 22 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 335 ஆக உயா்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 13,433 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 12,123 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 975 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT