மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மணல் திருடிய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை சனிக்கிழமை செய்தனா்.
பேரையூா் பகுதியில் மணல் திருட்டு சம்பந்தமாக போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது சிலைமலைப்பட்டி அருகே சோதனை செய்தபோது டிப்பா் லாரியில் உரிய அனுமதியின்றி கரம்பை மண்ணை அள்ளி விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் விசாரித்த போது கீழக்காடனேரியை சோ்ந்த குருசாமி மகன் முனிஷ்குமாா் (24), விருதுநகா் மாவட்டம் செவலூரை சோ்ந்த பெருமாள் தேவா் மகன் அழகா்சாமி என தெரியவந்தது.இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் குறித்து பேரையூா் போலீஸாா் டிரைவா் முனீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். தப்பியோடிய அழகா்சாமியை தேடி வருகின்றனா்.