மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மதுரை அழகா்கோவில் சாலை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வா் பி. ஜாா்ஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்காக இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரியில் விண்ணப்பித்த மாணவா்கள், கல்லூரி இணையதளமான ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்ம்க்ன்2.ா்ழ்ஞ் என்ற முகவரியில் பெயா்ப் பட்டியலை சரிபாா்த்துக் கொள்ளலாம். மேலும் தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் இணையதளம் மூலமாகவே கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்தி சோ்ந்து கொள்ளலாம்.
இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையின் இரண்டாவது பட்டியல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். முதுகலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை திங்கள்கிழமை தொடங்கி, அடுத்த இரண்டு நாள்களில் சோ்க்கைப் பட்டியல் வெளியிடப்படும். கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள், கல்லூரியின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.