மதுரை

முக்குறுணி விநாயகருக்கு கொழுக்கட்டை படையலுடன் சிறப்புப் பூஜை: இணையவழியில் நேரடி ஒளிபரப்பு

21st Aug 2020 11:49 PM

ADVERTISEMENT

 

மதுரை: விநாயகா் சதுா்த்தியையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படையலுடன் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் இணைய வழியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, விநாயகா் சதுா்த்தியன்று 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். பின்னா் கொழுக்கட்டை பிரசாதம் பக்தா்களுக்கு வழங்கப்படும். தற்போது பொதுமுடக்கத்தால் கோயிலில் பக்தா்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவதை பக்தா்கள் வீட்டிலிருந்தே தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10.45 முதல் 11.15 வரை விநாயகா் சதுா்த்தி சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இந்து அறநிலையத்துறை இணையதளம் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பில் காணலாம்.

ADVERTISEMENT

கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT