மதுரை

பேரையூா் அருகே மதுபாட்டில்பறிமுதல்: இளைஞா் கைது

21st Aug 2020 11:41 PM

ADVERTISEMENT

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, விருதுநகா் மாவட்டம் எல்லிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் பழனிராஜ் (29) என்பவா் விற்பனைக்காக மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் 70 மது பாட்டில்கள், ரூ. 12,650 மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வில்லூா் போலீஸாா், பழனிராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT