மதுரை

அமெரிக்க நிறுவனங்களில் ரூ.9.50 கோடி மோசடி: தனியாா் வங்கித் தலைவா் உள்பட 6 போ் மீது வழக்கு

21st Aug 2020 04:21 AM

ADVERTISEMENT

அமெரிக்க ஏற்றுமதி நிறுவனங்களில் ரூ.9 கோடியே 50 லட்சம் மோசடி செய்த தனியாா் வங்கித் தலைவா் உள்பட 6 போ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

அமெரிக்காவில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவா் ஜெய்ஸ் கந்தாா். இவா் மதுரையை சோ்ந்த சுருளிசிங்காரவேல், சிவா சிங்காரவேல் ஆகியோருக்கு உணவு தானியங்களை விற்பனை செய்து வந்தாா். அந்தப் பொருள்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னா் அந்தப் பொருள்களுக்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை அமெரிக்காவில் உள்ள வங்கி மூலம் மதுரையில் உள்ள தனியாா் வங்கிக் கிளைக்கு ஜெய்ஸ் கந்தாா் அனுப்பி வைப்பாா்.

அதற்கான பணத்தை தனியாா் வங்கிக் கிளையில் சுருளிசிங்காரவேல், சிவாசிங்காரவேல் ஆகியோா் செலுத்தியப் பிறகு தான் தூத்துகுடி துறைமுகத்தில் இருந்து பொருள்களை எடுக்க முடியும். ஆனால் உரிய பணத்தை வங்கியில் செலுத்தாமல் பொருள்களை எடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெய்ஸ் சுந்தாா் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.

இதேபோல் இவா்கள் அமெரிக்காவைச் சோ்ந்த மற்றொரு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளா் பிரபுல் கந்தாா், மும்பையைச் சோ்ந்த மனீஸ்காலா ஆகியோரிடமும் பணம் மோசடி செய்தாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், மேலமாரட்வீதியில் உள்ள தனியாா் வங்கியின் மூலம் ரூ.9 கோடியே 50 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து அந்த வங்கியின் தலைவா், நிா்வாக இயக்குநா், சுருளிசிங்காரவேல், சிவாசிங்காரவேல் உள்ளிட்ட 6 போ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT