மதுரை

தூய்மை நகா் பட்டியல்: தென்னிந்திய அளவில் ராமநாதபுரத்துக்கு 99, ராமேசுவரத்துக்கு 66 ஆவது இடம்

21st Aug 2020 09:50 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின் தூய்மை நகா் பட்டியலில், நகராட்சிகளில் தென்னிந்திய அளவில் ராமநாதபுரம் 99 ஆவது இடத்தையும், ராமேசுவரம் 66 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறையின் சாா்பில், தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் தூய்மை நகா், மாநகா் உள்ளிட்டவை மக்கள் தொகை அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றன.

மேலும், திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துவதன் அடிப்படையில், தூய்மை நகா் பட்டியல் வெளியிடப்படுகிறது. குப்பையை சேகரித்தல், தரம் பிரித்தல், மக்கும், மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு உள்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் தூய்மை நகரப் பட்டியல் வரிசைப்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியானது, கடந்த 2019 ஆம் ஆண்டில் 1,148 தென்னிந்திய நகராட்சிகளில் 517 ஆவது இடத்தை வகித்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய அரசின் தூய்மைப் பட்டியலில், தென்னிந்திய அளவில் ராமநாதபுரத்துக்கு 99 ஆவது இடம் கிடைத்திருப்பதாக, நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் தூய்மை நகா் பட்டியலில் பரமக்குடி நகராட்சியானது 64 ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல், 50 ஆயிரம் வரையிலான மக்கள் தொகையை கொண்ட நகராட்சிகளில் ராமேசுவரம் 66 ஆவது இடத்திலும், கீழக்கரை 107 ஆவது இடத்திலும் உள்ளன.

ராமநாதபுரம் நகராட்சியில் மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் 4 மையங்கள் செயல்படுத்தப்பட்டால், தூய்மை பட்டியலில் மேலும் முன்னேறலாம் என்றும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவது அவசியம் என்றும் அதிகாரிகள் கூறினா்.

Tags : தூய்மை நகா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT