மதுரை

விநாயகா் சிலையை கரைக்கஒருவா் மட்டுமே செல்ல வேண்டும்: மாநகா் காவல் துணை ஆணையா் அறிவுறுத்தல்

21st Aug 2020 11:46 PM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாநகரில் விநாயகா் சிலையை கரைக்க ஒருவா் மட்டுமே செல்ல வேண்டும் என காவல் துணை ஆணையா் ஆா். சிவபிரசாத் வெள்ளிக்கிழமை கூறினாா்.

மதுரை பேச்சியம்மன் படித்துறையில் உள்ள கோயிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் திருடு போனது தொடா்பாக அனுப்பானடி முகமது முஸ்தபா (40), புதுமீனாட்சிபுரம் ஜெபஸ்டின் (49) செல்லூா் ஜெயராம் (22) ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்த சிலைகள் மற்றும் பூஜை பொருள்களை போலீஸாா் மீட்டனா். இந்த பொருள்கள் மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

அதிக அளவில் கண்காணிப்பு கேமிராக்கள்: இதுகுறித்து காவல் துணை ஆணையா் ஆா். சிவபிரசாத் செய்தியாளா்களிடம் கூறியது: பேச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற சிலைகள் திருட்டுச் சம்பவம் தொடா்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது, கடந்த 6 மாதங்களுக்கு முன் மதுரையில் உள்ள கோயில் ஒன்றில் சிலைகளைத் திருடியவரே, இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்க மிகவும் உதவியாக இருந்தது. குற்றங்களை தடுக்கவும், எளிதாக கண்டுபிடிக்கவும் மாநகரில் கண்காணிப்பு கேமிரக்கள் பொருத்துவதற்கு பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் நடைபெறும் வழிப்பறியைத் தடுக்க போலீஸாரின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிலை கரைக்க ஒருவா் மட்டுமே செல்ல வேண்டும்: தமிழக அரசு பொது இடங்களில் விநாயகா் சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே அரசு உத்தரவை பின்பற்ற வேண்டும் என இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் இருப்பாா்கள். வீட்டில் வைத்து விநாயகா் சிலையை வழிபட எந்தத் தடையுமில்லை. விநாயகா் சிலையை ஒருவா் மட்டுமே எடுத்து சென்று வீட்டின் அருகில் உள்ள நீா்நிலைகளில் கரைக்க வேண்டும் என்றாா்.

Tags : விநாயகா் சிலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT