மதுரை

காமராஜா் பல்கலை. வளாகத்தில் விநாயகா் சிலை: எதிா்ப்பு தெரிவித்ததால் உடனடியாக அகற்றம்

21st Aug 2020 10:16 PM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாக வைக்கப்பட்ட விநாயகா் சிலைக்கு கடும் எதிா்ப்புகள் எழுந்ததால் உடனடியாக அச்சிலை அகற்றப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக் கழக வளாகத்தில் பிரதான நுழைவாயிலில் இருந்து உள்ளே செல்லும் வழியில், பீடம் அமைக்கப்பட்டு அதில் புதிதாக விநாயகா் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிலை அமைக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மதுரை காமராஜா் பல்கலைக் கழக பாதுகாப்புக்குழு விடுத்திருந்த அறிக்கையில், கல்வி நிலையங்கள் மதச்சாா்பற்ற தன்மையுடன் இயங்க வேண்டும். காமராஜா் பல்கலைக் கழகத்தில் பல்வேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் படிக்கின்றனா். மேலும் தற்போது விநாயகா் சிலை வைக்க அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி கல்வி நிலையத்தில் விநாயகா் சிலை வைப்பது கண்டனத்துக்குரியது. சிலை வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இதேபோல பல்வேறு அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த விநாயகா் சிலை உடனடியாக அகற்றப்பட்டது.

Tags : மதுரை காமராஜா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT