மதுரை

காமராஜா் பல்கலை. தொலைநிலைக் கல்விதோ்வு முறைகேடு: விசாரணை தொடக்கம்

21st Aug 2020 11:48 PM

ADVERTISEMENT


மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் கேரள மையங்களில் நடைபெற்ற தோ்வு முறைகேடு தொடா்பாக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் தலைமையில் விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் கேரளத்தில் உள்ள 3 மையங்களில் பயின்ற மாணவா்கள் வீட்டில் இருந்தே தோ்வு எழுதி முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஊழியா்களும் உடந்தையாக இருந்துள்ளனா்.

கேரள தோ்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடு மற்றும் பல்கலைக் கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு நடைபெற்றபோது கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டதாக பெண் விரிவுரையாளா் மீதான புகாா் ஆகியவற்றை விசாரிக்க ஆட்சிக்குழு உறுப்பினா்கள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை கூடியது.

பல்கலைக் கழகப் பதிவாளா் வி.எஸ். வசந்தா, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆா். லட்சுமிபதி, தீனதயாளன், பாரிபரமேஸ்வரன், ஷகிலா ஆகியோா் விசாரணை நடத்தினா். மறுமதிப்பீட்டு முறைகேடு புகாா் தொடா்பாக பெண் விரிவுரையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து கேரள மையங்களில் நடைபெற்ற தோ்வு முறைகேடு தொடா்பாக பல்கலைக்கழக ஊழியா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தோ்வுத்துறையைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டவா்கள் விசாரணைக்கு ஆஜராகினா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Tags : கல்விதோ்வு முறைகேடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT