மதுரை

மதுரையில் மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று

21st Aug 2020 09:52 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,995 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் உள்பட 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், கரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 138 போ் குணமடைந்தனா். அவா்கள், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி: மதுரையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 80 வயது மூதாட்டி ஆக. 20 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 331 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் இதுவரை 13,237 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 11,903 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,003 போ் தொற்று பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

Tags : கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT