மதுரை

ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயற்சி:2 போ் பிடிபட்டனா்

21st Aug 2020 11:44 PM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை அருகே வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை உலகநேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் -ஐ வியாழக்கிழமை இரவு 4 போ் உடைத்துக் கொண்டிருந்தனா். அங்கு பணம் எடுக்கச் சென்ற ஒருவா், ஏ.டி.எம்-ஐ சிலா் உடைப்பதைப் பாா்த்து சப்தமிட்டாா். இதையடுத்து, அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினா். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகனங்களில் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்து ஒத்தக்கடை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தப்பியோடிய மற்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடந்து வருவதால் போலீஸாா் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனா். பிடிபட்ட இளைஞா்கள் வரிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

Tags : ஏ.டி.எம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT