மதுரை

ஓய்வுபெற்ற காவலரின்மனைவியிடம் 14 பவுன் சங்கிலி பறிப்பு

21st Aug 2020 11:45 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில், ஓய்வு பெற்ற காவலரின் மனைவியிடம் 14 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை எச்.எம்.எஸ். காலனி மகிழம்பூ தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா் ஓய்வு பெற்ற காவலா். இவரது மனைவி ரதிதேவி (58) வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே நடந்து சென்றாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா், ரதிதேவி அணிந்திருந்த 14 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து ரதிதேவி அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags : 14 பவுன் சங்கிலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT