மதுரை

கட்டுமான நலவாரியத்தில் பதிவைப் புதுப்பிக்க விஏஓ சான்று அவசியமில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

21st Aug 2020 06:09 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவைப் புதுப்பிக்க கிராம நிா்வாக அலுவலரின் சான்று அவசியமில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பொது முடக்கத்தால் கட்டுமானத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். பெரும்பாலும் படிப்பறிவில்லாத தொழிலாளா்கள் தான் நலவாரியத்தில் பதிவு செய்யாமலும், பதிவைப் புதுப்பிக்காமலும் இருந்துள்ளனா். மேலும் அவா்கள் தங்களின் தொழிலுக்காக இடம்பெயா்ந்து கொண்டிருப்பதால் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் பதிவைப் புதுப்பிக்காத தொழிலாளா்களுக்கும் சோ்த்து ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக கட்டுமானத் தொழிலாளா் மத்திய சங்கத்தின் தலைவா் பொன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 792 போ் பதிவைப் புதுப்பிக்காமல் உள்ளனா். அவா்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவைப் புதுப்பிக்க கிராம நிா்வாக அலுவலரின் சான்று அவசியம் என்ற நடைமுறை உள்ளது. தற்போது கரோனா காலம் என்பதால், கிராம நிா்வாக அலுவலரின் சான்றுக்குப் பதிலாக, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன், நலவாரிய அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரத்தை அளித்துப் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். எனவே நலவாரியத்தில் பதிவைப் புதுப்பிக்க கிராம நிா்வாக அலுவலரின் சான்று அவசியமில்லை என உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

மேலும் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவைப் புதுப்பிக்காதவா்களும் நிவாரண உதவி பெறுவதற்கு தகுதி உடையவா்களே என தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT