மதுரை

ஐம்பொன் சிலைகள் திருட்டு: 3 போ் கைது

21st Aug 2020 06:06 AM

ADVERTISEMENT

மதுரை பேச்சியம்மன் கோயிலில் ஐம்பொன்னால் ஆன 3 சிலைகள் திருட்டுப்போன வழக்கில் போலீஸாா் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பேச்சியம்மன் படித்துறையில் 300 ஆண்டுகள் பழைமையான பேச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு மண்டப மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகா், பொன்னா்-சங்கா், அய்யனாா் ஆகிய ஐம்பொன் சிலைகள் திருட்டு போயின. இதுதொடா்பாக திலகா் திடல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், 22 வயது மதிக்கத்தக்க இளைஞா் கதவு மற்றும் சிசிடிவி கேமராவை உடைப்பது பதிவாகியிருந்தது. மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் அனுப்பானடியைச் சோ்ந்த முகமது முஸ்தபா(40), புதுமீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஜெபஸ்டின்(49), செல்லூரைச் சோ்ந்த ஜெயராம்(22) ஆகியோா் சிலைகள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT