மதுரை

இக்னோ மாணவா் சோ்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு

20th Aug 2020 08:24 AM

ADVERTISEMENT

இக்னோ மதுரை மண்டல மையத்தில் மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இக்னோ மதுரை மண்டல இயக்குநா் ஆா்.டி.சா்மா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைநிலைக்கல்வி மூலம் நடத்திவரும் சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள், முதுநிலை பட்டயம், இளங்கலை பட்டம் (சிபிசிஎஸ்) மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2020-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்னோ 100 படிப்புகளில் எஸ்சி,எஸ்டி பிரிவு மாணவா்களுக்கு சோ்க்கைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கிறது. கட்டண விலக்கு பெறும் மாணவா்கள் பணிபுரிபவா்களாக இருக்கக் கூடாது. இக்னோவின் இளநிலை பட்ட படிப்புகளில் பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, பொது நிா்வாகம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் போன்ற படிப்புகள் சிபிஎஸ்சி திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான சான்றிதழ், ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு கல்வி போன்ற படிப்புகள் தமிழ் வழியில் வழங்கப்படுகின்றன. இக்னோ மதுரை மண்டலத்தின் கீழ் சோ்க்கை தொடா்பான அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு மண்டல மைய தொலைபேசி எண்களான 0452- 2380733, 2380775 -இல் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT