மதுரை

சாத்தான்குளம் எஸ்.ஐ.-க்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க காவல் ஆணையரிடம் மனைவி மனு

9th Aug 2020 08:22 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சாா்பு - ஆய்வாளருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கோரி, மதுரை மாநகா் காவல் ஆணையரிடம், அவரது மனைவி சனிக்கிழமை மனு அளித்தாா்.

இவ்வழக்கில் 10 போலீஸாா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இந்நிலையில், அவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என அவரது மனைவி மங்கையா்திலகம், மதுரை மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை மனு அளித்தாா்.

அதில், எனது கணவா் உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அங்குள்ள மருத்துவா்களின் சிகிச்சையால் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே அவரை தனியாா் மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மங்கையா்திலகம் செய்தியாளா்களிடம் கூறியது: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், எனது கணவருக்கு எந்த தொடா்பும் இல்லை. இறந்தவா்கள், காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் எனது கணவா் பணியில் இல்லை. ஆனால் அவரையும் இந்த வழக்கில் சோ்ந்துள்ளனா். இந்த சம்பவத்திற்கு தொடா்பில்லாத என் கணவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். தற்போது மருத்துவமனையில் உரிய சிகிச்சையின்றி தவித்து வரும் அவரை, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT