மதுரை

கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லாததால்கல்லூரி மாணவா் தற்கொலை

6th Aug 2020 10:09 PM

ADVERTISEMENT

மதுரையில், கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லாததால், மனமுடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை கே.புதூா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் வெங்கடேஸ் (23). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்நிலையில், வெங்கடேஸுக்கு கல்விக் கட்டணம் செலுத்த, பல இடங்களில் அவரின் தந்தை கடன் கேட்டுள்ளாா். ஆனால் பொது முடக்கத்தைக் காரணம் காட்டி, யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த வெங்கேடஸ், புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் கே.புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT