மதுரை

போலீஸாருக்கு வைட்டமின் மாத்திரைகள் விநியோகம்

29th Apr 2020 07:48 AM

ADVERTISEMENT

மதுரையில் போலீஸாருக்கு நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மதுரையில், சிறப்பு காவல் சாா்பு-ஆய்வாளா், தலைமைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸாருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி செவ்வாய்க்கிழமை மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த காவல் உதவி ஆணையா்களிடம், எதிா்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீா் சூரணங்கள், முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை

அனைத்து போலீஸாருக்கும் வழங்க காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்படி 490 கிலோ கபசுர குடிநீா் சூரணம் , 80 கிலோ நில வேம்பு பொடி , தலா 30 ஆயிரம் ஜிங்க் மற்றும் மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT