மதுரை

கோடைவெயிலை சமாளிக்க பயிா்களுக்கு நிழல்போா்வை

29th Apr 2020 07:54 AM

ADVERTISEMENT

கோடைவெப்பல்நிலை காரணமாக வயலில் பாய்சும் நீா் விரைவில் ஆவியாதலைத் தடுக்க நிலப்போா்வை அல்லது மூடாக்கு அமைத்து பயிா்களைப் பாதுகாக்கலாம் என மதுரை வேளாண். அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் காய்கறிப்பயிா்களும் மரவகைப் பயிா்களும் பயிரிடப்பட்டுள்ளன. கோடைவெயில் 37 முதல் 40 டிகிரி செல்சிஸ் வெப்பம் வாட்டிவருகிறது. இதனால் தக்காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கனிப் பயிா்களுக்கு பாய்ச்சப்படும் நீா் விரைவில் ஆவியாகி பயிா்களுக்கு பயன்படாமல்போகிறது. இதனை தவிா்க்க பயிா்களுக்கு இடையே மண்ணிண் மேற்பரப்பில் தென்னை நாா்கழிவு, நிலக்கடலைதோல் மற்றும் பண்ணைக்கழிவுகளை பா்பபிவைத்து மூடாக்கு நிலப்போா்வை அமைக்கவேண்டும்.

மக்கும் பிளாஸ்டிக் தாா்ப்பாய் தற்போது தோட்டகலைத்துறை மூலம் பரிந்துரைக்கப்படுகிறது. இதனை பரப்பிவைப்பதன் மூலம் களைச்செடிகள் வளா்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணிண் தட்பவெட்பநிலை ஒருசீராகப் பராமரிக்கப்பட்டு விதை முளைப்புத் திறன் அதிகரிக்கிறது. பாய்ச்சப்படும் நீா் ஆவியாதல் தடுக்கப்பட்டு மண்ணில் நீா் அடிப்பகுதியில் தேங்குகிறது. அடிக்கடி நீா் பாய்ச்சவேண்டியதில்லை. மண்ணிண் வளம் கட்டமைப்பு பாதுகாக்கப்படுகிறது. பயிா்வளா்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு பயிா்களுக்கு கிடைக்கிறது.

வேளாண். கழிவுகளைக்கொண்டு மூடாக்கு நிலப்போா்வை அமைப்பதால் அதிக செலவில்லை. மேலும் பண்ணை கழிவுகள் மண்ணில் மக்கி அங்ககச் சத்துகளை அதிகரிக்கச்செய்கிறது என மதுரை வேளாண்.அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்விரமேஷ், தொழில்நுட்ப வல்லுநா் சி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT