மதுரை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளைபொருள்களை சேமிக்கலாம்

29th Apr 2020 07:50 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 5 ஆயிரத்து 268 மெட்ரிக் டன் அளவுக்கு விளைபொருள்களை சேமிக்க இடவசதி உள்ளது என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இவற்றில் இருக்கும் கிட்டங்கிகளில் 11 ஆயிரத்து 226 மெட்ரிக் டன் அளவுக்கு விளைபொருள்களைச் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 5 ஆயிரத்து 957 மெட்ரிக் டன் அளவுக்கு விவசாயிகள் சேமித்து வைத்துள்ளனா். இன்னும் 5 ஆயிரத்து 268 மெட்ரிக் டன் சேமிக்கும் அளவுக்கு இடம் காலியாக உள்ளது. திருமங்கலம் குளிா்பதனக் கிட்டங்கியில் 15 மெட்ரிக் டன் அளவுக்கு காய்கனி, பழங்கள், பயறு வகைகளை கட்டணமின்றி சேமித்து வைக்கலாம்.

கரோனா ஊரடங்கையொட்டி விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இந்த கிட்டங்கிகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் விளைபொருள்களை வைத்து பொருளீட்டுக் கடன் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதுதொடா்பான விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண்கள் மதுரை - 96775 50210, உசிலம்பட்டி - 98946 22582, திருமங்கலம் - 81100 54595, வாடிப்பட்டி - 96008 02823.

ADVERTISEMENT
ADVERTISEMENT