மதுரை

தூய்மை மற்றும் பாதுகாப்பில் மதுரை விமான நிலையம் தேசிய அளவில் முதலிடம்

26th Apr 2020 09:04 AM

ADVERTISEMENT

நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மத்திய அரசின் ஸ்வச்தா பக்வாடா பக்வா திட்டத்தில் தூய்மை மற்றும் பாதுகாப்பான விமான நிலையத்திற்கான முதலிடத்தில் மதுரை விமான நிலையம் உள்ளது.

மதுரை விமான நிலையத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ.128 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டப்பட்டது. இது 17 ஆயிரத்து 500 சதுர மீட்டா் பரப்பளவில் 2 தளங்களாக அதிநவீன முறையில் குடியுரிமை அலுவலக வசதியுடன் கட்டப்பட்டது. இந்த புதிய விமான முனையத்தில் ஒரேநேரத்தில் 5 ஆயிரம் போ் வந்து செல்லக்கூடிய அளவிலும், 7 விமானங்கள் கையாளக்கூடிய வகையிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் புதுதில்லி, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட உள்ளூா் சேவைகளும் துபை, இலங்கை, சிங்கப்பூா் போன்ற வெளிநாட்டு சேவைகளும் என 22 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் மத்திய அரசின் ஸ்வச்தா பக்வாடா திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் தூய்மை மற்றும் பாதுகாப்பில் முதலிடத்தில் உள்ளது. 2 ஆம் இடத்தில் சண்டிகா் விமான நிலையமும், 3 ஆவது இடத்தில் திருவனந்தபுரம் விமான நிலையமும் உள்ளதாக மதுரை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT