மதுரை

மதுரையில் 4 ஆயிரம் போ் கைது

7th Apr 2020 02:16 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 ஆயிரம் பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மாா்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தியது முதல் விதிமீறல்களில் ஈடுபடுபவா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

மதுரை மாவட்ட காவல் துறையினா் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,432 வழக்குகளை பதிவுசெய்து, 2,980 பேரை கைது செய்துள்ளனா். மேலும், 1,643 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

இதேபோன்று, மதுரை மாநகா் காவல் துறையினா் 990 வழக்குகளைப் பதிவு செய்து, 1064 பேரை கைது செய்துள்ளனா். காரணமின்றி சுற்றித் திரிந்தவா்களிடம் இருந்து 1,370 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

எனவே, மதுரை மாவட்டம் மற்றும் மாநகா் காவல் துறை சாா்பில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக மாா்ச் 23 முதல் ஏப்ரல் 5 வரை 3,422 வழக்கில் 4,044 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், 3,013 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT