மதுரை

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை: மதுபானக் கடைகளுக்கு ‘சீல்’

7th Apr 2020 02:20 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, போலீஸாா் அரசு மதுபானக் கடைகளுக்கு திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல இடங்களிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக, காவல் துறைக்கு புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. பேரையூா், தோப்பூா் பகுதிகளில் அரசு மதுபானக் கடை ஊழியா்களே மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து, 2 நாள்களுக்கு முன் இவ்வழக்கில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இதன் எதிரொலியாக, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவின்பேரில், திருமங்கலத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதேபோல், ஊரகப் பகுதிகளில் உள்ள 152 மதுபானக் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT