மதுரை மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலராக, அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதன்மையா் டி. மருதுபாண்டியனை நியமனம் செய்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, மாநகரில் அரசு மருத்துவமனை முதன்மையரும், மாவட்ட அளவில் சுகாதார இணை இயக்குநரும், துணை இயக்குநரும் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதன்மையா் டி. மருதுபாண்டியன், மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலராக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி இவா், மாநகா் மற்றும் மாவட்டத்தில் கரோனா தொடா்பான தடுப்பு பணிகள், வீட்டு கண்காணிப்பில், முகாமில் உள்ளவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவற்றை கண்காணித்து நாள்தோறும் அரசுக்கு தகவல் அளிப்பாா்.