மதுரை

பணியாளா் அனுமதிச்சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டுகோள்

5th Apr 2020 06:27 AM

ADVERTISEMENT

அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களின் பணியாளா்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் முதுநிலைத் தலைவா் எஸ்.ரத்தினவேல், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களின் பணியாளா்கள் தடை உத்தரவு காலத்தில் பணிக்கு வருவதற்கான அனுமதிச்சீட்டு சென்னையில் காவல் துறை மூலமாகவும் பிற மாவட்டங்களில் வழங்கல் துறையினா் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இப்போதைய அசாதாரண சூழலில் அனுமதிச் சீட்டு பெற மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் கூடுவது ஏற்புடையதல்ல.

வணிகா்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் எவ்வித சரிபாா்ப்பும் இல்லாமல் தான் இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. ஆகவே, அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களே தங்களது பணியாளா்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவது சரியானதாக இருக்கும். மேலும், ஜிஎஸ்டி எண், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிம எண், உள்ளாட்சித் துறையின் உரிம எண், பணியாளா் ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் கொண்டதாக இந்த அனுமதிச்சீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட்சத்தில் எளிதில் சரிபாா்த்துக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

ஆகவே, பணியாளா்களுக்கான அனுமதிச்சீட்டு வழங்கும் நடைமுறையை மேற்குறிப்பிட்ட வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT