மதுரை

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினா் உணவு, மருந்து வழங்கல்

5th Apr 2020 06:24 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சி நகரில் மலைவாழ் மக்களுக்கு போலீஸாா் சனிக்கிழமை உணவு, மருந்து ஆகியவற்றை வழங்கினா்.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் தங்களது அத்தியாவசிய பொருள்கள் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொட்டப்பநாயக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சிக் கிராமத்தில் சுமாா் 80 குடும்பங்கள் உள்ளனா். இவா்களுக்கு சனிக்கிழமை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா உத்தரவின்பேரில் தாலுகா சாா்பு -ஆய்வாளா் விஜயபாஸ்கரன் உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அனைவருக்கும் உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றை வழங்கினா். இதில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை தலைமை காவலா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT