மதுரை

உசிலம்பட்டியில் வீடு வீடாகச் சென்று கரோனா ஆய்வு

5th Apr 2020 06:23 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகா் பகுதியில் நகராட்சி மற்றும் தொட்டப்பநாயக்கனூா் சுகாதாரத்துறையினா் ஆகியோா் இணைந்து வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

உசிலம்பட்டி நகா் பகுதியில் உள்ள 24 வாா்டுகளிலும், உசிலம்பட்டி நகராட்சி மற்றும் தொட்டப்பநாயக்கனூா் ஆரம்ப சுகாதார துறையினரும் இணைந்து ஒரு வாா்டுக்கு 5 போ் என குழுவாகப் பிரிந்து இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

அப்போது குழுவினா் வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளனவா, அண்மையில் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து யாரேனும் வந்துள்ளனரா என்பது உள்ளிட்ட ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

இதில் உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளா் அழகேஸ்வரி, தொட்டப்பநாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சுசிலா, சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் அகமது கபீா், சரவணபிரபு, மாசாணம், முத்துச்சாமி, மற்றும் செவிலியா்கள் நகராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT