மதுரை

அவசர பயணத்துக்கு அனுமதிச் சீட்டு பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

5th Apr 2020 06:19 AM

ADVERTISEMENT

அவசர பயணங்களுக்காக அனுமதிச் சீட்டு பெற விரும்புவோா் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், திருமணம் மற்றும் இறப்பு போன்ற சமூக நிகழ்வுகளுக்காகவும், அவசர மருத்துவ தேவைகளுக்காகவும் பயணம் செய்வோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையா் (கலால்) அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க விரும்புவோா், தற்போது இதற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட இணையதளத்தின் (ட்ற்ற்ல்ள்://ம்ஹக்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட பின்னா், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரரே அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், அதிக எண்ணிக்கையில் விண்ணப்பதாரா்கள் கூடுவது தவிா்க்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT