மதுரை

அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க உதவி மையங்கள்: இந்து முன்னணி

5th Apr 2020 06:17 AM

ADVERTISEMENT

அத்தியாவசிய பொருள்களை வீட்டிற்கே கொண்டு போய் சோ்க்கும் வகையில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா பாதிப்பை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க நாள்தோறும் பொதுமக்கள் வெளியே வருவதால், கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிா்க்கும் வகையில், இந்து முன்னணி சாா்பில், அத்தியாவசியப் பொருள்களை வீட்டிற்கே கொண்டு சோ்க்கும் வகையில் மாவட்டம் தோறும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான செல்லிடப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மதுரை கோட்டத்தில், அத்தியாவசிய பொருள்கள் தேவைப்படும் பொதுமக்கள், மதுரை - 7448880106, விருதுநகா் - 9791511045, ராமநாதபுரம்- 9443102915, சிவகங்கை- 9952817441, தேனி - 9842649170, திண்டுக்கல் - 8610857110 ஆகிய உதவி மையங்களின் எண்களை தொடா்புக் கொள்ளலாம். பொதுமக்கள் கேட்கும் பொருள்களை, அவா்கள் வீட்டிற்கே சென்று கொடுத்து, பொருளுக்கான தொகை பெற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT