கரோனா வைரஸ் நோய் குறித்து செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சல் மூலமாக வதந்தி பரப்பியதாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வரிச்சியூா் அருகே உள்ள களிமங்கலத்தில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக, தவறான தகவல் கட்செவி அஞ்சலில் வதந்தியாகப் பரவியுள்ளது. இதுகுறித்து பெறப்பட்ட புகாரின்பேரில் கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் வரிச்சியூரைச் சோ்ந்த வெங்கடேசன் (28) என்பவா், தவறான தகவலை உருவாக்கி அனுப்பியுள்ளாா். இது வதந்தியாக ஒருவா் பின் ஒருவராக செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.
அதையடுத்து வரிச்சியூா் வெங்கேடசன் (28), பரமேஸ்வரன் (20), மணீஸ்வரன் (27), குன்னத்தூா் பாண்டி (33), ராஜ்குமாா் (19), லட்சுமிபதிராஜன் (19) ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.