மதுரை

கப்பலூர் துப்பாக்கிச் சூடு சம்பவம்: கைதான 4 பேரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை

13th Sep 2019 08:24 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலீஸார் காவலில் எடுத்து வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஒரு கும்பல் தகறாறு செய்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. இந்த வழக்கில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான சென்னை எண்ணூர் தனசேகரன், திருச்சியைச் சேர்ந்த சசிகுமார், பெரம்பலூரைச் சேர்ந்த கார்த்திகேயன், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் ஆகிய 4 பேரை திருமங்கலம் போலீஸார் வியாழக்கிழமை காவலில் எடுத்தனர். அவர்கள் 4 பேரிடமும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தரமாணிக்கம்  தலைமையில் போலீஸார் திருமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT