மதுரை

தொடக்கப் பள்ளியில் கைகழுவும் தினம்

10th Sep 2019 10:23 AM

ADVERTISEMENT

மதுரையில் தொடக்கப்பள்ளியில் கை கழுவும் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மதுரை  டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற கை கழுவும் தின நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவர் சுரேந்திரன் பாபு தலைமை வகித்தார்.  பள்ளிச்செயலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் க.சரவணன்  பேசும்போது, "நமது கைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கைகள் வழியாக வியாதிகள் பரவும் வாய்ப்பு அதிகம். சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் , விளையாடிய பின்பும் கை , கால்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். கைகள் வழியாக கொக்கிப்புழு, தூசி ,அழுக்கு வழியாக பிற நோய் கிருமிகள் உடலுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. அதனால் , வயிற்று போக்கு , வாந்தி உண்டாகும். ரத்தச் சோகை ஏற்பட வாய்ப்பு உண்டு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,. ஆகவே, வருமுன் காப்போம், கை கழுவும் முறையை தெரிந்துக் கொண்டு நோயற்ற வாழ்வு வாழப் பழகுவோம் என்றார். நகர சுகாதார செவிலியர்கள் ஆண்டாள், பஞ்சவர்ணம் ஆகியோர் கை கழுவும் முறை குறித்து மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் கற்றுக் கொடுத்தனர். பள்ளி துணைத்தலைவர் ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் வெங்கடலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  ஆசிரியர் உஷா தேவி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT