மதுரை

குடும்பத் தகராறில் தீ வைக்கப்பட்ட சிறுமியும் பலி

10th Sep 2019 10:28 AM

ADVERTISEMENT

மதுரையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் தீ வைக்கப்பட்டு காயமடைந்த  சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை பகலவன் நகரைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் காளீஸ்வரன். இவரது மனைவி லதா. இவர்களது மகன் கார்த்திக்பாண்டி, மகள் மகாலட்சுமி (13).
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலை லதா மற்றும் மகாலட்சுமி  மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு  காளீஸ்வரன் தப்பி ஓடி விட்டார்.இதில் பலத்த காயமடைந்த லதா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே உயிரிழந்தார். 
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காளீஸ்வரனை கைது செய்தனர். இந்நிலையில்,  உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 5 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த மகாலெட்சுமி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT