மதுரை

இரு சம்பவங்களில் 10 பவுன் நகைகள் திருட்டு

10th Sep 2019 10:25 AM

ADVERTISEMENT

மதுரையில், இரு இடங்களில் நடந்த திருட்டு சம்பவத்தில் 10 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த சக்திவேல், மனைவி சந்தானலட்சுமி(40). இவர், ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பினார். 
அப்போது , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 5 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறிந்து சந்தானலட்சுமி அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
மதுரை கே.புதூர் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி கார்த்திகேஸ்வரி(37). இவர் ஞாயிற்றுக்கிழமை முனிச்சாலை - ருக்மணிபாளையம் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கார்த்திகேஸ்வரி கழுத்திலிருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். 
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விளக்குதூண் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT