மதுரை

யூனியன் வங்கி சார்பில் இயற்கை வள பாதுகாப்பு பிரசாரம்

7th Sep 2019 08:02 AM

ADVERTISEMENT

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இயற்கை வளப் பாதுகாப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக மதுரை பப்ளிக் பள்ளியில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
    இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் யூனியன் வங்கி நாடு முழுவதும் உள்ள கிளைகள் மூலமாக ஆகஸ்ட் 15 முதல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. வரும் 2020 மார்ச்சுக்குள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 119 மரக்கன்றுகள் நடுவது மற்றும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 இந்த பிரசாரத்தின்போது நீர் சேமிப்பு, மின்சார சிக்கனம், காகிதம் சேமிப்பு, நெகிழி பொருள்கள் தவிர்ப்பது ஆகியன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக மதுரை பேச்சிக்குளத்தில் உள்ள மதுரை பப்ளிக் பள்ளியில், ஆசிரியர் தினம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
   இதில் வங்கியின் பிராந்திய மேலாளர் ஸ்ரீநிவாஸ் வங்கலா,  ஆசிரியர்களை கெளரவித்தார். இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி தலைவர் நாச்சியப்பன், இயக்குநர் ஆதிமூலராஜன், முதல்வர் கெளரி சாலமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT