மதுரை

மூக்கையா தேவர் நினைவு தினம்: அனைத்துக் கட்சியினர் அஞ்சலி

7th Sep 2019 07:48 AM

ADVERTISEMENT

பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.கே.மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உள்ள நினைவிடத்தில் அனைத்துக் கட்சியினர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சேடபட்டி முத்தையா, மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலர் பி.மூர்த்தி, கொள்கை பரப்புச் செயலர் தங்க. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், மாவட்டச் செயலர் மகேந்திரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலச் செயலர் பி.வி.கதிரவன், பாரதிய பார்வர்டு பிளாக் முருகன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் திருமாறன், சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகி டாக்டர் ஜெபமணி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில்...: மதுரை அரசரடியில் உள்ள மூக்கையா தேவரின் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோர்
மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT