மதுரை

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 23.28 லட்சம்

7th Sep 2019 07:49 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.23.28 லட்சம் இருந்தது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் துணை ஆணையர்(பொறுப்பு) மு.ராமசாமி, மதுரை உதவி ஆணையர் விஜயன், தக்கார் பிரதிநிதி முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஸ்கந்த குரு பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரொக்கம் ரூ.23 லட்சத்து 28 ஆயிரத்து 237,  தங்கம் 220 கிராம், வெள்ளி 5 கிலோ 485 கிராம் இருந்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT