மதுரை

சுவாமி சிவானந்தர் பிறந்த நாள்:  இலவச யோகாசனப் பயிற்சி

7th Sep 2019 07:49 AM

ADVERTISEMENT

சுவாமி சிவானந்தர் பிறந்தநாளையொட்டி சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் இலவச யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.8) தொடங்குகிறது.
இது குறித்து தமிழ்நாடு யோகாசன சங்க பொதுச்செயலர் யோகி ராமலிங்கம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருநகரை அடுத்த யோக நகரில் உள்ள சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில், சுவாமி சிவானதரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் வரும் 8 ஆம் தேதி  முதல் 15 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சி அளிக்கப்படும். 
பெண்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணிவரை பயிற்சியும், மாலை 6 மணி முதல் 7 மணிவரை தியானம், மூச்சுப்பயிற்சியும் அளிக்கப்படும். மன அழுத்தம் மற்றும் இதர நோய் உள்ளவர்களுக்கு வாழ்வியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு  76396 35704-என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT