மதுரை

சிறுமிக்கு திருமணம்: பெற்றோர் மீது வழக்கு

7th Sep 2019 07:50 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் மற்றும் உறவினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். 
 திருமங்கலத்தை அடுத்த மேலஉரப்பனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த நாகராஜ் (24) என்பவருக்கும் கடந்த 1 ஆம் தேதி திருமணம் நடந்தது. இத்திருமணம் பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நடப்பதாக குழந்தைகள் நல அலுவலர் வீரசரவணனுக்கு  தகவல் வந்தது. தகவலின்பேரில் சிறுமி மீட்கப்பட்டு மதுரை முத்துப்பட்டியில் உள்ள  காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக வீரசரவணனின் புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் பெண்ணின் தந்தை பிரகாஷ், தாயார் லோகமணி, அக்கா பிரியா, பெண்ணை  திருமணம்  செய்த நாகராஜ் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT