மதுரை

குளங்களைத் தூர்வாரக் கோரி கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

7th Sep 2019 07:50 AM

ADVERTISEMENT

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மானாவாரி குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
கொட்டாம்பட்டி பகுதியில் 202 மானாவாரி பாசன குளங்களைத் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கம்பூர் இளைஞர்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால்,  இதுவரை குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் பணியைத் தொடங்கவில்லை. இதனால் வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கினால் மலைப்பகுதிகளில் மழைபெய்து நீரோடைகளில் வரும் நீர் வீணாகிவிடும் வாய்ப்புள்ளது. எனவே, மழைநீரைச் சேகரிக்கும் வகையில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் இப்பகுதிகளில் உள்ள 202 குளங்களை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் வட்டார விரிவாக்க அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்துசென்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT