மதுரை

உழைப்பு, நேர்மை, மனிதநேயம் கடைபிடிப்பவர்கள்: வாழ்கையில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்; முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் 

7th Sep 2019 08:03 AM

ADVERTISEMENT

உழைப்பு, நேர்மை, மனிதநேயம் மூன்றையும் கடைபிடித்தால் வாழக்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம் என நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் தெரிவித்தார்.
 மதுரை, நீதிபதி சிவராஜ் வி. பாட்டீல் பவுண்டேசன் சார்பில்  நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற்றது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் வி.பட்டீல் எழுதிய இனிய காலை 365 என்ற நூலை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் வெளியிட்டார். முதல் பிரதியை தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் கமலா சங்கரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்று புதுச்சேரி மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி  பேசியது: ஆசிரியர்கள் மாணவர்களின் வருங்காலத்தையும், நல்ல சமுதாயத்தையும், நல்ல நாட்டையும் உருவாக்கின்றனர். ஆசிரியர்களின் பங்கு முக்கியதுவம் வாய்ந்தது. ஆசிரியர்கள் தங்கள் பணியில் முழு ஈடுபாடுடன் பணியாற்ற வேண்டும். வருங்காலம் மாணவர்களுடையது, வருங்கால மாணவர்களை சார்ந்தே உள்ளது. உழைப்பு, நேர்மை, மனிதநேயம் மூன்றையும் வாழ்கையில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம். இந்த மூன்றையும் மாணவர்கள் கண்டிப்பாக கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
முன்னாள் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மு.கற்பகவிநாயகம், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி ஆகியோரும் பேசினர். வழக்குரைஞர்கள், எஸ். செல்வ கோமதி, ரமணி மேத்யு, மிருணாளினி, அ.மகபூப் ஆதிப், ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT