மதுரை

உதவிப் பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார்: பல்கலைக்கழக மானியக்குழு பதிலளிக்க உத்தரவு

7th Sep 2019 08:00 AM

ADVERTISEMENT

தஞ்சையில் உள்ள காதிர் முகைதீன் கல்லூரியில் உதவிப்பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யக் கோரும் வழக்கில், பல்கலைக்கழக மானியக்குழு இணைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 
 தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிகாபுதின் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் காதிர் முகைதீன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ந்த கல்லூரியில் காலியாக உள்ள வரலாறு, வணிகவியல், கணினி அறிவியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற உள்ளதாக ஆகஸ்ட் 21 இல் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில்,  இடஒதுக்கீடு குறித்தும் தெளிவான விவரங்கள் இல்லை.
பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, உதவிப்பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி வி.எம். வேலுமணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பல்கலைக்கழக மானியக் குழு இணைச் செயலர், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர், காதிர் முகைதீன் கல்லூரிச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT