மதுரை

அரிசிக் கடையில் ரூ.88 ஆயிரம் திருட்டு

7th Sep 2019 07:50 AM

ADVERTISEMENT

மதுரையில் பூட்டியிருந்த அரிசிக் கடையில் இருந்து ரூ.88 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள டி.எம். நகரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவர் தெற்கு மாரட் வீதியில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். மறுநாள் கடைக்குச் சென்று பார்த்தபோது, கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர்கள், கடையில் இருந்த ரூ.88 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தங்கப்பாண்டி கொடுத்த புகாரின்பேரில், தெற்குவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT