மதுரை

மாநில நல்லாசிரியர் விருது:  மதுரை மாவட்டத்தில் 13 பேர் தேர்வு

4th Sep 2019 09:52 AM

ADVERTISEMENT

மாநில நல்லாசிரியர்  விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை பரவை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெ.ராஜசேகரன், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியை க.முருகேஸ்வரி, ச.மேலப்பட்டி ஸ்ரீஎம்.கே.வி.சாலா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தி.திலகவதி, வசந்தநகர் தியாகராசர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.வி.ராமநாதன், லெட்சுமிபுரம் டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எபனேசர் ஜேம்ஸ், பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.தாமோதரன், கீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அ.ஜான் பெலிக்ஸ் கென்னடி, சின்னக்கட்டளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சீ.ஜென்னி, உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி ஆசிரியர் வே.மதன்பாபு, தத்தனேரி புனித ஜான் டி பிரிட்டோ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கு.ஜோசப் ஜெயராணி, சோலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.சுப்புலட்சுமி, திருவள்ளுவர் நகர் ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச.வெங்கடேசன் ஆகிய 13 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT